மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சல்யுட் கேப்டன்! கொரோனா சிகிச்சைக்கு தேமுதிக அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.! விஜயகாந்த்தின் பதிவால் குவியும் வாழ்த்துகள்.
சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று இந்தியாவிலும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கொரோனா நோயால் இதுவரை தமிழகத்தில் மட்டும் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கொரோனா நோயால் தமிழகத்தில் மட்டும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தேமுதிக தலைமை அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா சிகிச்சைக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் மேல்மருவத்தூர் அருகில் இயங்கி வரும் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.