மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிரபல நடிகை! வெளியிட்ட முதல் பதிவு! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் வித்தியாசமாகவும், பார்ப்போர் பெருமளவில் வியந்து, அவர்களை கவரும் வகையிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ சர்வைவர். இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பலரது கவனத்தையும் கட்டியிழுத்தது.
இந்த நிகழ்ச்சியில் விக்ராந்த், உமாபதி, ஐஸ்வர்யா, நந்தா, விஜயலக்ஷ்மி, லக்கி நாராயண், வெனஸ்ஸா க்ரூஸ், அம்ஸத் கான், சரண், சிருஸ்டி டாங்கே, பெசன்ட் ரவி, பார்வதி விஜே, காயத்திரி ரெட்டி, ராம் சி, லேடி காஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, இந்திரஜா, இனிகோ பிரபாகர் உள்ளிட்ட 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கினார்.
90 நாட்கள் நிறைந்த இந்த போட்டியில், உயிரையும் பணயம் வைத்து செய்யும் வகையில் கடினமான பல சவால்கள் கொடுக்கப்பட்டது. அனைத்து சவால்களையும் தகர்த்தெரிந்து விஜயலட்சுமி வெற்றி பெற்று ஒரு கோடி பரிசை தட்டிச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து முதன்முதலாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்களது அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, ஒரு அருமையான நினைவுகளை கொடுத்ததற்கு எனது 17 சக போட்டியாளர்களுக்கும் நன்றி.
முதல் நாளில் இருந்தே நாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என எனக்கு நன்கு தெரியும். நம்மிடம் சொல்வதற்கு ஒரு சூப்பர் ஹீரோ ஸ்டோரி உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் நடிகர் அர்ஜுன் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.