திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய் நடிக்கும் லியோ படத்தின் கதையை போட்டுடைத்த திரைக்கதை இயக்குனர்... படக்குழு அதிர்ச்சி.!?
இளையதளபதி விஜய் நடித்து ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது மாஸ்டர் திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தற்போது மாஸ்டர் படத்திற்கு பின்பு இளைய தளபதியின் 67வது படமான லியோ படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படம் லோகேஷ் யுனிவர்ஸ் என்ற வரிசையில் விக்ரம் பட கதையின் தொடர்ச்சியாக லியோ படம் அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
லியோ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பித்து கொடைக்கானலில் நடந்து கொண்டிருந்தது. தற்போது படக்குழு காஷ்மீரில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். தளபதி 67 படத்தின் டைட்டில், நடிகர் , நடிகைகள், சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே தீயாக பரவியது.
இந்நிலையில், அப்படத்தின் வசனகர்த்தா ரத்தினகுமார் மூன்று நாட்களில் காஷ்மீர் கிளம்பி செல்ல இருக்கிறார். அப்போது ரத்தினகுமார் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது லியோ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை விட அதிகமாகவே இருக்கும் என்று உடைத்து பேசியிருக்கிறார்.
மேலும், விஜய் நடிக்கும் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்ததற்கு காரணத்தை பத்திரிகையாளர்கள் கேட்டபோது இந்த படம் பான் இந்தியா படமாக அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த ஆங்கில பெயர் என்று குறிப்பிட்டார். விக்ரம், மாஸ்டர் போன்ற திரைப்படங்களின் வசனம் மற்றும் திரைக்கதையை எழுதிய ரத்தினகுமார் தான் லியொ படத்திற்கும் திரைக்கதை, வசனத்தை எழுதுகிறார் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.