#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒருவழியாக ரிலீசுக்கு தயாரான விக்ரமின் துருவ நட்சத்திரம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா, ராஜேஷ், ரித்து வர்மா பார்த்திபன், சிம்ரன் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளது.
பண பிரச்சினை காரணமாக இந்த படத்தை வெளியிட முடியாமல் படக்குழு கஷ்டப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த மே மாதத்தில் வெளியிடப் படகுழு தீவிர முயற்சி செய்தது. ஆனால் வெளியிட முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது ஒரு வழியாக தீபாவளிக்கு வெளியிடப்பட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் டீசர் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.