திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திடீரென தன் சம்பளத்தை பல கோடி உயர்த்திய நடிகர் விக்ரம்! எவ்வளவு தெரியுமா? பரவி வரும் தகவல்!!
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பார்வதி நடிப்பில் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம்தான் தங்கலான். இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அண்மையில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த சில படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரப்படாத நிலையில் விக்ரமின் நம்பிக்கை படமாக இப்படம் அமைந்துள்ளது.
கோலார் தங்க வயலை மையப்படுத்தி இக்கதைகளம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரமின் அடுத்த படம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்படத்திற்கு நடிகர் சியான் விக்ரம் 50 கோடி சம்பளமாக பெற உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விக்ரம் தற்போது ரூ. 23 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் திடீரென தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.