மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹிந்தியில் ரீமேக்காகும் நடிகர் விக்ரமின் சூப்பர் ஹிட் திரைப்படம்!! ஹீரோ இவரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நடிகர் விக்ரம். படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை வருத்தி தனது உடல் தோற்றத்தையே மாற்றி, அர்ப்பணிப்போடு நடிக்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தனது திறமையால் புகழின் உச்சிக்கே சென்ற அவர் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் இருமுகன். இத்திரைப்படத்தில் நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சிபு தமீனின் தமீம்ஸ் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்ற படங்கள் அனைத்தும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இருமுகன் திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
தமிழில் இப்படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கரே ஹிந்தி ரீமேக்கையும் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனந்த் ஷங்கர் தற்போது ஆர்யா மற்றும் விஷால்
நடிப்பில் உருவாகும் எனிமி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் வேலைகள் முடிந்த பிறகு அவர் இருமுகன் ஹிந்தி ரீமேக்கை இயக்குவார் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் விக்ரமே ஹீரோவாக நடிப்பாரா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.