மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விக்ரமா இது? ஆள் அடையாளமே தெரியாத புகைப்படத்தால் மிரண்டுபோன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சீயான் விக்ரம். படத்திற்காக தனது உடலை வருத்தி படத்தின் கதைக்கு ஏற்றார் போல் தோற்றத்தை கொண்டுவருவதில் இவருக்கு இணை இவரே என்று கூறலாம். சங்கர் இயக்கத்தில் உருவான ஐ போன்ற படங்களில் தனது உடலை வருத்தி பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் நடிகர் விக்ரம்.
இந்நிலையில் நடிகர் கமலின் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.மேலும் ஜூலை 19 வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனை தொடர்ந்து விக்ரம், இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விக்ரமின் 58-வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதிய வித்தியாசமான லுக்கில் விக்ரம் சமீபத்தில் கடாரம்கொண்டான் பட ஆடியோ வெளீயீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் எந்த படத்திற்கு இந்த நியூ லுக் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.