திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மகனை தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கும் விக்ரமின் மருமகன்.! முதல் படத்திலேயே ஜோடி யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சீயான் விக்ரம். படத்திற்காக தனது உடலை வருத்தி படத்தின் கதைக்கு ஏற்றார் போல் தோற்றத்தை கொண்டுவருவதில் இவருக்கு இணை இவரே என்று கூறலாம். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கமலின் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவ்வாறு தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்து பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் விக்ரம் தனது மகன் துருவ்வை ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமின் தம்பி அரவிந்த் ஜான் விக்டர் எப்போ கல்யாணம் என்ற படத்தில் வில்லனாக அறிமுகமாகவுள்ளார்.
அவர்களை தொடர்ந்து தாதா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கும் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தில் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் ஐஸ்வர்யா தத்தா நடிக்கஉள்ளார். மேலும் அவர்களுடன் பிக்பாஸ் சீசன் 1ன் மூலம் பிரபலமான ஜூலி, மற்றும் காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருச்சி, கோவாவில் நடைபெறவுள்ளது.