#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கடவுளே! கமல், அர்ஜுனை தொடர்ந்து இந்த பிரபல முன்னணி ஹீரோவுக்குமா? செம ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அனைவரும் அசரும் வகையில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் தான் ஒப்புக்கொண்ட கதாபாத்திரத்துக்காக எத்தகைய ரிஸ்க்குகளையும் எடுக்க கூடியவர்.
அவர் தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம், மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விக்ரமுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது நடிகர் விக்ரமுக்கு திடீரென
லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
அப்பொழுது பரிசோதனை முடிவில் நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் லேசான பாதிப்பே உள்ளதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு கமல் கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். அவரை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.