மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விக்ரம்! வெளியிட்ட முதல் வீடியோ!, இதோ..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சீயான் விக்ரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவியது.
அதனை தொடர்ந்து தனது அப்பாவுக்கு மாரடைப்பு கிடையாது. அவருக்கு நெஞ்சில் அசௌகரியம் ஏற்பட்டதாலே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வதந்திகளை கேட்டு எங்கள் மனம் வலிக்கிறது. அப்பா நலமாக உள்ளார் என கூறியுள்ளார்
“I’m all right.. love all..” #chiyaanVikram pic.twitter.com/6UUjt4VBWp
— FridayCinema (@FridayCinemaOrg) July 10, 2022
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விக்ரம் முதன்முதலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நிறைய அன்பு, நிறைய அக்கறை. உங்களது அன்பையும், அக்கறையும் கண்டு மிகவும் வியந்து போனேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். உங்களுக்கு ஸ்பெஷலான மிக மிக நன்றி என கூறியுள்ளார்