திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சீயான் விக்ரமின் மனைவியை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தனது உடல் எடையை ஏற்றியும், இறக்கியும் ஆர்வமுடன் நடிப்பதற்கு என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரை ரசிகர்கள் செல்லமாக சீயான் விக்ரம் என அழைத்து வருகின்றனர்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் துருவ் விக்ரமும் திரைத்துறையில் ஆர்வம் கொண்டு படங்களில் நடித்து வருகிறார். தற்போது விக்ரமின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.