#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சீயானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விக்ரம்.. வைரலாகும் பதிவு.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தனது கடினமான உழைப்பாலும், அயராத நடிப்பாலும் ரசிகர்களிடையே பிரபலமானார். குறிப்பாக இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனது உடலை வருத்திக்கொண்டு நடித்து வருகிறார்.
நடிகர் விக்ரமின் ரசிகர்கள் சீயான் என்று செல்லமாக அழைக்கின்றனர். அதற்கு காரணம் இயக்குனர் பாலா இயக்கத்தில், நடித்த சேது திரைப்படத்தில் இவரை சீயான் என்று அழைத்தனர். அன்றிலிருந்து இன்று வரை ரசிகர்கள் விக்ரமின் சீயான் விக்ரம் என்று அழைக்கின்றனர்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சீயான்!! #Sethu pic.twitter.com/gQEAeiXvOU
— Vikram (@chiyaan) December 10, 2023
இந்த நிலையில் சேது திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதனை நினைவுபடுத்தும் விதமாக தனது சமூக வலைதள பக்கத்தில், "இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சீயான்!!" என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.