மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா.! அவ்ளோ சண்டைகளுக்கிடையே குத்தாட்டம் போட்ட விக்ரமன்- மைனா.! வைரல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையை சேர்ந்த 21 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டநிலையில், நிகழ்ச்சியிலிருந்து தனது பிள்ளைகளை காண வேண்டும் என ஜி.பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார். மேலும் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷனும் நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சி துவங்கிய இரண்டாவது வாரத்திலேயே சாந்தி மாஸ்டர், மூன்றாவது வாரத்தில் அசல் கோளார், கடந்த வாரம் ஷெரினா ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அதனால் போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதங்கள், சண்டைகளும் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த வாரம் கொடுக்கப்பட்ட பேக்டரி டாஸ்க்கிலும் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் சென்றது. மேலும் அமைதியாக இருந்த பல போட்டியாளர்களுக்குமிடையே மோதல் வெடித்தது. இதற்கிடையில் மைனா நந்தினி மற்றும் விக்ரமன் இருவரும் தனுஷின் சூப்பர் ஹிட் பாடலான மேகம் கருக்காதா பாடலுக்குஆட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
That was so much fun man😂🕺! #Vikraman & Myna's Megam Karukatha ~ to more of such fun bro duos and carefree things✨️
— Amy 🌊 (@amycreationnss) November 10, 2022
| @RVikraman @MynaNandhini |#BiggBossTamil6 #BiggbossTamil pic.twitter.com/vPTPNbDlX4