மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென அந்த பிக்பாஸ் டைட்டில் வின்னரை சந்தித்த விக்ரமன்.! யாரை பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6வது சீசனில் 21 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விக்ரமன். அரசியல்வாதியான அவர் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் மிகவும் சகஜமாக பழகி ரசிகர்களை கவர்ந்தார். ஆனாலும் அவர் அவ்வப்போது பிக்பாஸ் வீட்டில் சமூக கருத்துக்களை கூறி வந்தார். மேலும் பிக்பாஸ் வீட்டில் எழும் பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்
மேலும் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று விக்ரமன்தான் பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் அசீம் வெற்றியாளர் ஆனார். விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். ஆனாலும் விக்ரமனுக்கு வெற்றியாளருக்கு இணையாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இந்த நிலையில் அண்மையில் விக்ரமன் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரியை சந்தித்துள்ளார். ஆரியும் பிக்பாஸ் வீட்டில் நியாயமாக பேசி, பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இந்த நிலையில் விக்ரமன் மற்றும் ஆரி இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.