#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்! அதுவும் எந்த கட்சியில் தெரியுமா??
தமிழ் சினிமாவில் பசங்க திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விமல். இப்படத்தில் இவரது நடிப்பு பெருமளவில் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் களவாணி, தூங்கா நகரம், கலகலப்பு, தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, மாப்ள சிங்கம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் எதார்த்தமான இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விமல் கடந்த 2010ஆம் ஆண்டு அக்ஷயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அக்ஷயா மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கொரோனா பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திய காலங்களில், 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து அனைவராலும் பாராட்டப்பட்டார்.
இந்த நிலையில் விமலின் மனைவி அக்ஷயா வரும் சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் விமலும் அவரது மனைவி அக்ஷயாவும் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். இந்நிலையில் அக்ஷயாவிற்கு திமுக சீட்டு தருமா என பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.