மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உள்ளாடையுடன் தண்ணீருக்குள் மூழ்கி பிரபல நடிகர் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ.!
கடந்த 30 வருடங்களாக பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். ஹிந்தியில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ள இவர், இதுவரை தொண்ணூறுக்கும் மேற்பட்ட ஹிந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அடிப்படையில் ஒரு பஞ்சாபிக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தற்காப்புக் கலைகள் பயந்து, தற்காப்புக்கலைப் பயிற்றுநராக இருந்தவர். பின்னர், தனது கட்டுடல் மூலம் விளம்பரப்படங்களில் மாடலாகவும் வலம் வந்தார். மேலும் ஹிந்தியில் ரீமேக் ஆகும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
அதன்படி, ராகவா லாரன்ஸின் காஞ்சனா, சூர்யா நடித்த சூரரைப் போற்று மற்றும் ராட்சசன் ஆகிய படங்களின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமடைந்துள்ளார் அக்ஷய் குமார். தற்போது 56 வயதிலும் தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில், தண்ணீருக்கு அடியில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அக்ஷய் குமார். 56 வயதிலும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவரைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள்.