#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஷால்-அனிஷா திருமணம் இப்பொழுதுதானா? அதிரடியாக திருமண தேதியை அறிவித்தார் விஷால்!!
தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவர் நடிகை வரலட்சுமியை காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் விஷால், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சவீதா தம்பதியின் மகள் அனிஷாவை காதலித்து, திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவலை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து மார்ச் 16 விஷால் மற்றும் அனிஷாவிற்கு படுகோலகாலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.அதனை தொடந்து விஷால் தற்பொழுது பேட்டி ஒன்றில் தனது திருமண தேதியை அறிவித்துள்ளார்.அதன்படி விஷால் மற்றும் அனிஷாவிற்கு வரும் அக்டோபர் 9ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்காமல் கல்யாணம் கட்டிக்க மாட்டேன் என்று வாக்குறுதி அளித்தீர்களே அது என்னவாயிற்று என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.