#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஷால் 34 பட டைட்டில்.! வெளியானது முக்கிய அறிவிப்பு.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். விஷால் 34 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
மேலும் அந்த படத்தில் கெளதம் மேனன், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது விஷால் 34 படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்நிலையில் அதற்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Flame up the excitement 🔥#Vishal34 - Title Reveal with FIRST SHOT on 1.12.2023. #Hari @stonebenchers @ZeeStudiosSouth pic.twitter.com/2dcnRAbchJ
— Vishal (@VishalKOfficial) November 27, 2023