மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விஷால் பிறந்தநாள்.! யாரெல்லாம் கொண்டாடினாங்க தெரியுமா.?
தயாரிப்பாளர் ஜி கே ரெட்டியின் மகன் தான் நடிகர் விஷால் ரெட்டி. 1977 ம் ஆண்டு பிறந்த இவர், 'ஜாடிக்கேத்த மூடி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதன்பின்னர், விஷால் 'செல்லமே' படத்தில் ஹீரோவாக அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு போன்ற பிளாக் பஸ்டர் படங்களில் நடித்து தன்னை ஒரு ஆக்க்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டார்.
நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவரான விஷால், தற்போது 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்குவதன் மூலம் தன்னை ஒரு இயக்குனராகவும் வெளிப்படுத்த உள்ளார்.
தற்போது, ஹரி இயக்கும் படத்தில் விஷால், பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடிக்கின்றனர். இந்நிலையில் காரைக்குடியில் நடைபெற்றுவரும் இப்படத்தின் படப்பிடிப்பில், விஷால் தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.