திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன், என்னால் தாங்க முடியலை! கதறி அழும் விஷால்! துடிதுடித்து போன பிரபல நடிகை!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் விஷால். பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தற்போது சன் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் யாரேனும் பிரபலங்கள் கலந்துகொள்வார். அவர்களோடு ஏதேனும் ஒருவகையில் மிகவும் பாதிக்கப்பட்டு, உதவ யாரும் இல்லாமல் அவதிப்பட்டு வரும் மக்கள் கலந்துகொண்டுகொண்டு தங்களது கஷ்டங்களை பகிர்ந்து கொள்வர்.
இதனை கேட்கும் பிரபலம் ஏதேனும் வேலை செய்து பணம் ஈட்டி , அதன்மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் குஷ்பு கலந்துக்கொள்ள, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நித்தியா என்ற பெண்ணும் இதில் கலந்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நித்யா புற்றுநோயின் இறுதி கட்டத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார். இன்னும் நான்கு மாதத்தில் இறந்து விடும் நிலையில் உள்ளார் என மருத்துவர் தெரிவிக்கிறார்
.
மேலும் நோய் வந்தது தெரிந்ததும் அவரின் கணவரும் அவரை தனிமையில் விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் நித்தியா தனக்கு பெண் குழந்தை உள்ளார். அவரை படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதன் ப்ரோமோவில் ஒரு கட்டத்தில் விஷால் ‘இதற்கு தான் நான் இந்த நிகழ்ச்சியை நான் செய்ய மாட்டேன் என்றேன், எனக்கு இந்த வலி தெரியும்’ என்று சொல்லி அழுதுக்கொண்டே நிகழ்ச்சியை விட்டு வெளியேற குஷ்பு அவரை சமாதானப்படுத்தினார்.