"எந்த விருதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை" நடிகர் விஷால் கருத்து..



Vishal don't believed in any award

தமிழில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், 'மார்க் ஆன்டனி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம், வரும் செப்டம்பர் 15ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

vishal

தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங் தூத்துக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து, விஷால் ஹரியுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், திரைப்படங்களுக்கு மத்திய அரசின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருது கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில முக்கியமான படங்களுக்கு எந்த விருதும் கிடைக்காதது குறித்து, அனைத்து பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

vishal

இந்நிலையில், இதுகுறித்துப் பேசிய விஷால், "தேசிய விருது மட்டுமல்ல, எந்த விருதிலுமே எனக்கு நம்பிக்கை இல்லை. இவருக்கு விருது கொடுக்கலாமா, வேண்டாமா என்று யாரோ ஒரு 4 பேர் தீர்மானிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று விஷால் கூறியுள்ளார்.