மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. 15 வயது குறைந்த இந்த பிரபல நடிகையுடன் விஷாலுக்கு காதலா?? யார்னு பார்த்தீங்களா?? தீயாய் பரவும் தகவல்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். அவர் தற்போது லத்தி திரைப்படத்தில் நடிக்கிறார். அதனை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்பு ஆரம்பமாகாமல் உள்ளது.
நடிகர் விஷால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கக்கூடியவர். தற்போது 45 வயதாகும் அவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து, இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவியது. அதனைத் தொடர்ந்து அவருக்கு அனிஷா ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட நிலையில் சில காரணங்களால் திருமணமும் நின்றது.
இந்நிலையில் நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போது அவர் நாடோடிகள், பூஜை, குற்றம் 23, ஈசன் போன்ற பல படங்களில் நடித்துள்ள, வாய் பேச முடியாத காது கேளாத 30 வயது நிறைந்த நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. பரவி வரும் இந்த தகவல் குறித்து இருவரும்தான் விளக்கமளிக்க வேண்டும்.