மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அது உண்மைதானா? விஷால் திருமணம் குறித்து வெளியான தகவல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் செல்லமே படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் விஷால். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உள்ளார். மேலும் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார் .
இந்த நிலையில் விஷாலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 16ம் தேதி நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விஷால், அனிஷாவுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் நடிகர் விஷால் தனது திருமணம் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டி அதில்தான் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அனிஷா,விஷாலுடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கினார். அதனை தொடர்ந்து விஷால் திருமணம் ரத்து செய்யப்பட்டதாகவும் வேறு ஒரு நபருடன் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை இந்தநிலையில் விஷாலுக்கு நெருக்கமானவர்கள் விஷாலுக்கு திருமணம் ரத்து செய்யப்பட்டது உண்மைதான் என்று கூறியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.