#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா அனிஷா இப்படிபட்டவரா? பேரதிர்ச்சி அடைந்து விஷால் போட்டுடைத்த ரகசியம்!
தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவர் நடிகை வரலட்சுமியை காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் விஷால், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சவீதா தம்பதியின் மகள் அனிஷாவை காதலித்து, திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அனிஷா அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஷால் அனிஷாவுடன் தனது காதல் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது;
ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதுதான் அனிஷாவை சந்தித்தேன். அவரை பார்த்தவுடனேயே எனக்கு பிடித்து விட்டது. மேலும் நான் தெருநாய்களை பற்றி திரைப்படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டிருந்தேன். அது தொடர்பாக அவரிடம் விவாதம் செய்தேன். அப்போதுதான் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. நான்தான் கடலை முதலில் கூறினேன்.
மேலும் அனிஷா தேசிய அளவு கூடைப்பந்து வீராங்கனை, சிறந்த சமூக சேவகி, அதுமட்டுமின்றி அனிஷா புலி ஒன்றிற்கு பயிற்சி அளித்து வருகிறார். அந்த புலியை அவர் மிகவும் எளிதாக தூங்க வைத்து விடுகிறார். முதன் முதலாக அதை நான் பார்த்த போது பேரதிர்ச்சி அடைந்தேன் என விஷால் கூறியுள்ளார்.