திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய் மகன் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த மாதிரி பேசிய நடிகர் விஷால்.?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால், தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆன்டனி' படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து இயக்குனர் ஹரி படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய விஷாலுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து விஷால் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் உள்ள சிறுவர்களுடன் தன் பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, "19 வருடங்களாக எனக்கு சோறு போட்ட மக்களுக்கு, இது போன்ற நல்ல நாட்களில் என்னால் முடிந்ததை நண்பர்களுடன் சேர்ந்து திருப்பி செய்து வருகிறேன். விஜயின் மகனுக்கு இந்த வயதில் இயக்குனராவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும்.
இப்போது எனக்குள் இருக்கும் இயக்குனர் விழித்துக்கொண்டான். துப்பறிவாளன் 2 படத்தை அடுத்த ஆண்டு இயக்குவேன். உதய், மகேஷ், ராஜா அனைவரும் என் நண்பர்கள் தான். நாங்கள் கல்லூரியில் ஒன்றாகத் தான் படித்தோம். அவர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது" என்று விஷால் கூறினார்