53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
ஒரு படத்திற்காக இப்படியா? விஷ்ணுவிஷால் வெளியிட்ட புகைப்படத்தால் ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால்.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான விஷ்ணு ஜீவா, குள்ளநரி கூட்டம், நேற்று இன்று நாளை,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைதொடர்ந்து விஷ்ணுவிஷால் நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும் அதனையடுத்து இடம் பொருள் ஏவல் என்ற படம் உருவாகி வெளியாகவுள்ளது.
மேலும் இயக்குனர் எழிலின் இயக்கத்தில் ஜகஜால கில்லாடி என்ற படத்தில் விஷ்ணுவிஷால் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என்று ரசிகர்களால் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
ALL MUDDY :) #Kaadan #Aaranya pic.twitter.com/tpJhZDzR4b
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) 6 May 2019
இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது உடல் முழுக்க சேற்று மண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.