மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்க்கார்! கிட்ட கூட நெருங்க முடியாத விசுவாசம்! கடைசில இப்படி ஆயிடுச்சே!
இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விசுவாசம் திரைப்படம். படத்தின் முதல் பாகம் சுமார் என்றாலும், இரண்டாம் பாகம் ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்துள்ளது. சிவா, அஜித் கூட்டணியில் உருவான விவேகம் படம் படு தோல்வியடைந்த நிலையில் விசுவசம் படம் சற்று ஆறுதலாக உள்ளது என்றே கூறலாம்.
அதேபோல சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துல பேட்ட திரைப்படமும் நேற்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்குகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய ரஜினியை பார்ப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விசுவாசம் படத்தின் முதல் நாள் தமிழக வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி விசுவாசம் படம் தமிழகம் முழுவதும் வெளியான முதல்நாள் சுமார் 14.5 கோடி வரை வசூலித்து செய்துள்ளது.
இதற்குமுன்பு AR முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் முதல்நாள் சுமார் 30 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி விசுவாசம் திரைப்படம் சர்க்கார் திரைப்படத்தின் முதல் நாள் வசூலில் பாதியைக்கூட வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.