#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இணையத்தை தெறிக்கவிடப்போகும் விஸ்வரூபம் -2 படத்தின் அடுத்த ரிலீஸ்! ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு
கமல்ஹாசன் இயக்கத்தில் அவர் நடிப்பில், மாபெரும் சர்ச்சைகளுக்கு இடையே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் விஸ்வரூபம். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்தப்படத்தில் கமல்ஹாசனுடன், ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்தனர்.
இதையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவிருக்கிறது. இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
மேலும், இப்படம் ஆகஸ்ட் 10-ல் ரிலீசாகும் என படக்குழு அறிவித்தது. அது மட்டுமின்றி, ஜிப்ரான் இசையில் வெளியாகிய `நானாகிய நதிமூலமே', `ஞாபகம் வருகிறதா' உள்ளிட்ட 2 பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், படத்தின் புரோமஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து `சாதி மதம்' என்ற மூன்றாவது பாடல் வரிகள் அடங்கிய வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கமல்ஹாசன் எழுதிய இந்த பாடலை சத்யபிரகாஷ் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து பாடியுள்ளனர். விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.