மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜீ தமிழுக்கு தாவிய பிரபல சன்மியூசிக் தொகுப்பாளினி! எந்த நிகழ்ச்சிக்காக தெரியுமா?
தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே அஞ்சனா. இவரது கலகலப்பான பேச்சிற்கென ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதனை தொடர்ந்து அஞ்சனா கடந்த சில வருடங்களுக்கு முன்பு கயல் பட நாயகனான சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு
அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அதனால் தனது தொகுப்பாளினி பணியில் இருந்து சற்று ஓய்வு எடுத்து வந்த அஞ்சனா தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களம் இறங்க உள்ளார். அதாவது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் .
இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . அஞ்சனா கூறியதாவது, விஜேவாக நான் இருந்த எனது 10 வருட பயணத்தில் என்னை ஒரு வலுவான நபராக உருவாக்கியதற்கு சன் குழுமத்திற்கு மிகவும் நன்றி. மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நான் ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ஜீ தமிழ் உடன் இணைய உள்ளேன், உங்களது அன்பும், ஆதரவும் எனக்கு என்றும் தேவை என பதிவிட்டுள்ளார்.
After my 10 years of Journey as a VJ i should thank sun network for moulding me into a strong person on and off screen! After the long break i took, I ll be associated with @ZeeTamil for hosting Junior Super Stars 3 from now on. Need all ur love and support as always ❤️
— Anjana Rangan (@AnjanaVJ) 9 March 2019