மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் விஜே மகேஸ்வரி வெளியிட்ட முதல் வீடியோ.! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில், வித்தியாசமான டாஸ்க்குகள், நாளுக்கு நாள் சண்டை, மோதல் என விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடிய விஜே மகேஸ்வரி நேற்று குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மேலும் எலிமினேஷனின் போது கமலிடம் பேசிய அவர், நான் வீட்டில் இருந்த ஒவ்வொரு நாளும் நானாக இருந்தேன், கேமராவிற்காக நடிக்கவில்லை. அதனால் திருப்தியாக செல்கிறேன் என கூறியிருந்தார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவரை குடும்பத்தினர்கள் கேக் வெட்டி அன்புடன் வரவேற்றனர். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மகேஸ்வரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
#BiggBossTamil6 #VjMaheshwari Her exit was too graceful no drama and she is with full of positivity she is fully satisfied with her game pic.twitter.com/sdKcE8UEau
— Dexter, (@Dexterbb6war) November 13, 2022
அதில் அவர், என் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி. எலிமினேஷன் ஆனதற்காக நான் வருத்தப்படவில்லை. நான் 100% எனது விளையாட்டை சிறப்பாக விளையாடினேன். வெளியே வந்தவுடன்தான் எனக்கு எவ்வளவு பெரிய சப்போர்ட் இருக்குனு தெரியுது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இதேபோல் தொடர்ந்து எனக்கு அன்பை காட்டுங்கள் என கூறியுள்ளார்.