திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீட்டில் கோலாகலமாக நடந்த விசேஷம்! செம ஹேப்பியில் விஜே பிரியங்கா.! என்ன தெரியுமா??
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விஜே பிரியங்கா. மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் மாகாபா ஆனந்துடன் இணைந்து அவர் செய்யும் அட்ராசிட்டிகள் வேற லெவல்.
இந்நிலையில் பிரியங்கா விஜய் டிவியில் பிக்பாஸ் 5வது சீசனிலும் கலந்து கொண்டார். மேலும் தனது சில செயல்களால் ரசிகர்களின் மோசமான விமர்சனங்களை பெற்ற அவர் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது பிரியங்காவின் தம்பியின் மனைவி கர்ப்பமாக உள்ளார்.
இன்று அவருக்கு வளைகாப்பு விழா நடை பெற்றுள்ளது. அப்பொழுது ப்ரியங்கா தனது தம்பி மனைவியின் வயிற்றில் காதை வைத்து கேட்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ஆண்டிகிட்ட வாமா.. என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.