திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய் தொலைக்காட்சி ஆங்கர் விஜே ரம்யாவிற்கு திடீர் விபத்து.. மருத்துவமனையில் அனுமதி.?
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜய் ரம்யா.
இவர் விஜய் தொலைக்காட்சியில் பல முக்கிய நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தொகுப்பாளினியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கான தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார் விஜே ரம்யா.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் ரம்யா, தொலைக்காட்சியில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் பணியாற்றுவதை தவிர்த்து வந்தார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜே ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவர் உடற்பயிற்சி செய்யும் போது எடுக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.
இவ்வாறு சமீபத்தில் இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது வீடியோ எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டார். அந்த வீடியோவில் ரம்யாவிற்கு விபத்து ஏற்பட்டு உடலில் காயம் ஏற்பட்டது. இதனால் விஜே ரம்யாவை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.