திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பல ஆண்டுகளுக்கு முன் இப்படி இடுப்பில் கைவைத்து போஸ் கொடுத்துள்ள இந்த பிரபல நடிகை யார் தெரியுதா.? அட! அவரா இது?
பொதுவாக தங்களின் சிறுவயது புகைப்படம் என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. பொதுமக்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை தங்களது சிறுவயது புகைப்படங்களையும் மிகவும் பொக்கிஷமாக வைத்திருப்பார்கள்.
நமக்கு நன்கு தெரிந்த ஒருவரின் சிறுவயது புகைப்படத்தை பார்த்தாலே மிகவும் ஆச்சரியத்துடன் பார்க்கும் நாம் அதுவே சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒரு பிரபலத்தின் புகைப்படம் என்றால் சற்று கூடுதல் ஆச்சரியத்துடன் தான் பார்ப்போம். பலநேரங்களில் அட, அந்த நடிகர், நடிகையா இது என வியப்புடன் பார்க்கும் தருணங்களும் வரத்தான் செய்கிறது.
அந்த வகையில் தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா. ரம்யா விஜய் டிவியில் தொகுப்பாளினியாக மட்டும் இல்லாமல் மொழி, மங்காத்தா, ஓகே கண்மணி போன்ற பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தொகுப்பாளினி ரம்யா. அவரது குழந்தைப் பருவ புகைப்படம் தான் இந்த புகைப்படம்.