திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடையாளம் தந்த சென்னை கை விட்டுருச்சா?. மீண்டும் இங்க தான வருவீங்க - விஜே ரம்யாவின் பதிவிற்கு நெட்டிசன்கள் காட்டம்.!!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் ரம்யா. தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட ரம்யா, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதனை கலகலப்பாக தொகுத்து வழங்குவார்.
இவர் வனமகன், மாஸ்டர், சங்க தலைவன் உட்பட பல படங்களிலும் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விவாகரத்தும் அறிவித்து இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தை புகைப்படம் எடுத்த அவர், "எனது முதல் தாய் வீடு என்னை கைவிட்டது. இரண்டாவது தாய் வீடு தெலுங்கானா காப்பாற்றியுள்ளது" என குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை கண்ட பலரும் உங்களுக்கு அடையாளம் தந்தது சென்னை தான். சென்னையே வெள்ளத்தில் மிதிக்கிறது. இப்படியான நேரத்தில் இந்த பதிவு தேவையா?, மீண்டும் இங்க தான வருவீங்க என காட்டமான பதில்களை தந்து வருகின்றனர்.