திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாரதம் ஹை கிளாஸ், குத்து லோ கிளாஸா?.. லியோ பாடலுக்கு நடனமாடி சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி.!
சின்னத்திரை தொலைக்காட்சிகளில் விஜேவாக அறிமுகமாக பின் தொகுப்பாளராக பணியாற்றியவர் ரம்யா. இவர் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், திரைப்பட வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் ஜெயராமன் என்பவரையும் திருமணம் செய்து கொண்டு, பின் ஓராண்டில் விவாகரத்து பெற்றார். அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.
இந்நிலையில், இவர் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் லியோ திரைப்பட பாடலுக்கு நடனமாடும் வீடியோ வெளியிட்டார். அந்த பாடலுக்கு பரதநாட்டிய முறையில் நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில், கிளாஸ் என்ற எழுத்தையும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், பரதநாட்டியம் என்றால் ஹை கிளாஸ், குத்து என்றால் லோ கிளாசா?. எப்படி ஜாதி ரீதியாக பேசுகிறார்கள் என்று அவரை கடுமையாக விமர்சித்தனர். இந்த சர்ச்சைக்கு ரம்யா பதிலளிக்கையில், "மக்கள் என்னைப் பற்றி பல விதத்தில் நினைத்தாலும், அதனை கண்டு கொள்ளப் போவதில்லை. என்னைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது தான் இங்கு முக்கியம்" என தெரிவித்துள்ளார்.