திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னால முடியல.. நான் முடிச்சுக்குறேன்! லைவ் சாட்டில் கதறிய ரசிகை! கொந்தளித்து போன விஜே ரம்யா!!
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விஜே ரம்யா. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ஏராளமான கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும் அவர் சினிமாவில் ஏராளமான படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் ரம்யா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இதற்கிடையில் ரம்யா கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அண்மையில் இந்த நாள் எப்படி சென்றது? என ரசிகர்களிடம் கேள்வியெழுப்பி லைவ் சாட்டில் ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது ரசிகர்கள் பலரும் தங்கள் வீட்டில் நடந்த லூட்டிகள் மற்றும் தங்களது இக்கட்டான சூழல் ஆகியவற்றை ரம்யாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ரசிகை ஒருவர், எனது கணவர் தினமும் என்னை அடிக்கிறார். அதனால் என்னோட கல்யாண வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். எல்லா பெண்களும் உங்களுக்காக நீங்கள் போராட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த ரம்யா இதற்கு பதிலளிக்கும் வகையில், நீங்கள் பாதுகாப்பான இடத்தில் உங்கள் குடும்ப நண்பர்களுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த மாதிரி பெண்களுக்கு எதிரான மன மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. உங்களுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். மேலும் ஏதேனும் துன்புறுத்தல்கள் இருந்தால் அதனை மனதிற்குள் வைத்துக் கொள்ளாமல் நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என ஆறுதலாக கூறியுள்ளார்.