மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி என்ன ஆனார் தெரியுமா .! வெளிவந்த அதிர்ச்சி தகவல் இதோ..
90களில் முன்னணி ஹீரோவாக நடித்து வந்தவர் நடிகர் சரத்குமார். இவர் 1988ஆம் ஆண்டு வெளியான கண்சிமிட்டும் நேரம் என்ற திரைப்படம் மூலம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.
1984ஆம் ஆண்டு சாயாதேவியைத் திருமணம் செய்துகொண்ட சரத்குமார், 2000ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி.
இப்போது சாயாதேவி, விவாகரத்தான பல பெண்களுக்கு, பிரச்சனைகளை எதிர்கொள்ள ஆலோசனை வழங்கி வருகிறார். இதுகுறித்துப் பேசிய அவர், "ஒரு குழந்தைக்கு அம்மா, அப்பா இருவருமே முக்கியம். அதே சமயம், விவாகரத்து பெற்ற பெண்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.
நானும் மற்ற பெண்களை போலவே எல்லா பிரச்சனைகளையும் கடந்து வந்துள்ளேன். எனவே, என் மகள் வரலட்சுமி ஆரம்பித்த சேவ் சக்தி அறக்கட்டளை மூலம் விவாகரத்தான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவுகிறேன்" என்று அவர் கூறினார்.