திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எத்தன.? "லியோ படத்தில் அசுரனா.?" லியோ படம் பற்றிய புதிய செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தத் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் த்ரிஷா மன்சூர் அலி கான், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் இயக்குனர்கள் கௌதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
லியோ திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இந்தத் திரைப்படம் தொடர்பான அப்டேட்டுகள் மற்றும் செய்திகள் என சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தது. தற்போது படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையிலும் பல செய்திகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
தற்போது வந்திருக்கும் செய்திகளின்படி பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் அனுராக் கஷ்யப் இந்தத் திரைப்படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் என வெளியாகி இருக்கிறது. மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷும் இந்த திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் தோன்ற இருப்பதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கின்றன.