மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"விருமாண்டி திரைப்படத்திற்கு பின்பு இந்த காரணங்களினால் தான் திரைப்படங்களில் நடிக்கவில்லை" மனம் திறந்த நடிகை அபிராமி..
தமிழில் வெளிவந்த 'வானவில்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிராமி. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்தவர். கடைசியாக நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து 'விருமாண்டி' படத்தில் நடித்தார். அதன் பிறகு உயர் படிப்பிற்காக அமெரிக்கா சென்று விட்டார்.
தன்னுடைய நீண்டகால நண்பரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகியுள்ளது. ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து உள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் கமல்ஹாசன் நடித்த 'உத்தமவில்லன்' படத்தில் டப்பிங் கலைஞராகப் பணியாற்றி உள்ளார். மேலும் தற்போது வெப் தொடரிலும் நடித்து வருகிறார். அதில் நடிப்பதற்காக இந்தியா வந்துள்ளார். சொந்த மாநிலமான கேரளாவில் தங்கி இருக்கிறார்.
அது பற்றி சமூக வலைதள பேட்டியில், "விருமாண்டி படத்தில் நடித்தபோது எனக்கு 19வயது தான். அனைவரும் எனது முதிர்ச்சியான நடிப்பை பாராட்டியவர். மேலும் இயக்குனர் கூறியதை அப்படியே உள்வாங்கி நடித்ததால் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது" என்றும் கூறினார். அமெரிக்கா சென்றது பற்றி ஏற்கனவே அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தேன். அதனால் விருமாண்டி படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்றுவிட்டேன். அதனால் அடுத்த படங்களில் என்னால் நடிக்க முடியவில்லை. இனி வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்.