#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரக்ஷிதா தினேஷை விட்டு பிரிந்ததற்கு காரணம் என்ன தெரியுமா.? பெற்றோர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற நெடுந்தொடர் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் ரட்சிதா. இந்த தொடருக்காக அவர் தன்னை கருப்பாக காட்டி நடித்திருந்தார். இந்த தொடரில் அவருடைய கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றதால், சரவணன் மீனாட்சி தொடரில் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், இது சொல்ல மறந்த கதை என்று தொடர்ச்சியாக நெடுந்தொடர்களில் அவர் நடித்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் பங்கேற்றுக் கொண்ட அவர், அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறவில்லை. அந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் ரட்சிதா தன்னுடைய கணவர் தினேஷை பிரிந்திருக்கிறார் என்பது வெளியே தெரிந்தது.
தற்சமயம் ரட்சிதாவின் கணவர் தினேஷ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில்தான் தினேஷின் பெற்றோர் ஒரு பேட்டியை வழங்கியுள்ளனர். அந்த பேட்டியில், ரட்சிதா தொடர்பாக நாங்கள் எந்த ஒரு தவறான கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. இருவரும் தற்போது தனித்தனியே பிரிந்திருக்கிறார்கள்.
ரட்சிதா மிகவும் நல்லவர்தான். தற்போது அவர் தவறான வழியில் நடந்து கொண்டிருக்கிறார். உண்மையில் ரட்சிதா இவ்வளவு நாள் பிரிந்து இருக்கக்கூடிய ஆளே இல்லை. ஆனால், அவர் தற்போது எப்படி இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியவில்லை. அதேபோல ரட்சிதாவை பற்றி எந்த விதமான தவறான செய்தி வந்தாலும் அதனை நாங்கள் நம்ப மாட்டோம். அவர் அந்த மாதிரி பெண் இல்லை என தெரிவித்துள்ளனர்.