தலைவர் 171... சூட்டிங் எப்போது தொடங்கும்.? வெளியான அப்டேட்.!



when-the-shooting-of-thalaivar-171-new-updates

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து தனது பரபரப்பான நடிப்பை துவங்கி விட்டார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்தத் திரைப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர்170 என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tamil cinemaஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் அவர் கௌரவ வேடத்தில் தோன்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tamil cinemaஇந்நிலையில் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171 திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் எப்போது துவங்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நவம்பர் மாதம் ரஜினி தனது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்தபின் தொடங்க இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.