மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுதலை திரைப்படத்திற்கு பிறகு சூரி கதாநாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படம் திரைக்கு வருவது எப்போது.?
சூரி கதாநாயகனாக முதன்முறையாக நடித்த திரைப்படம் தான் விடுதலை. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன் காரணமாக, இந்த திரைப்படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டது. அதன்படி அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நடிகர் சூரி தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில், கருடன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஒரு முழுமையான ஆக்ஷன் திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்தில் வெற்றிமாறன் கதாசிரியராக பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கும்பகோணம் போன்ற பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தில் ரேவதி ஷர்மா, உன்னி முகுந்தன், சசிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில், எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதி புனித வெள்ளி தினத்தில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.