ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பிகில் படத்தில் நயன்தாராவிற்கு டப்பிங் பேசியது யார் தெரியுமா? அட இவரா? புகைப்படம்.
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு சென்றுவிட்டார் நடிகை நயன்தாரா. நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா பல்வேறு சர்ச்சைகளை கடந்து இன்று இந்த உயரத்திற்கு வளர்ந்துள்ளார்.
ஆட்டம், பாட்டம், காதல் என்று மட்டும் இல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் படங்களையும், தனி ஒரு நடிகையாக கதை உள்ள படங்ளையும் தேர்வு செய்து நடித்துவருகிறார் நடிகை நயன்தாரா. தற்போது சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக தர்பார் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவரது நடிப்பில் சமீபத்தில் பிகில் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக, கால்பந்தாட்ட அணியின் பிஸியோ தெரபிஸ்டாக நயன்தாரா நடித்திருப்பார்.
கேரளாவை பூர்விகமாக கொண்ட நயன்தாரா தான் நடிக்கும் படங்களில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியது இல்லை. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் மட்டும் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியிருந்தார் நயன்தாரா.
பொதுவாக நயன்தாரா நடிக்கும் அணைத்து படங்களுக்கும் அவருக்கு டப்பிங் பேசுவது பிரபல டப்பிங் கலைஞரும், நடிகையுமான தீபா வெங்கட்தான். ராஜா ராணி, தனி ஒருவன், அறம், விஸ்வாசம் என நயன்தாராவின் பெரும்பாலான படங்களுக்கு தீபா வெங்கட்தான் டப்பிங் பேசியுள்ளார்.
பிகில் படத்திலும் நயன்தாராவிற்கு தீபா வெங்கட்தான் டப்பிங் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.