மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலக நாயகன் கொடுக்கும் சிக்கலால் குழப்பத்தில் ரஜினி.!சூப்பர் ஸ்டார் 171 தயாரிக்கப் போவது யார்.?
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து கைதி மாஸ்டர் விக்ரம் என மூன்று மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களின் ஒருவராக உயர்ந்திருக்கிறார். தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் ரஜினியின் 171 வது திரைப்படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் மிஷ்கின் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து படம் இயக்கப் போவதாக செய்தியை வெளியிட்டு இருந்தார். இதனால் திரை உலகமும் இந்த செய்தியை உறுதியாக நம்பி வந்தது.
விக்ரம் படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய ஒரு கிஃப்ட் கொடுத்தார் லோகேஷ் என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் ரஜினி மற்றும் லோகேஷ் இணை இருக்கும் ரஜினியின் 171 வது திரைப்படத்தை எந்த நிறுவனம் தயாரிப்பது என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில் அந்தப் படத்தினை தயாரிக்க தயாராக இருப்பதாக கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ரஜினியின் 171 வது திரைப்படத்தை தயாரிக்க ஆர்வமாக இருக்கிறது. இதனால் குழப்பத்தில் இருக்கிற ராம் ரஜினி இந்தத் திரைப்படத்தை தனது நண்பர் கமல்ஹாசனுக்கு கொடுக்கவா அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கொடுப்பதா என்று முடிவெடுக்க முடியாமல் தவித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு லால் சலாம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.