#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வெல்லப்போகும் அந்த போட்டியாளர் இவர்தான்! யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 97 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் மூன்று இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் நேற்று கவின் வெளியேறியதை அடுத்து தற்போது 5 பேர் மட்டும் விளையாடிவருகின்றனர்.
இந்த சீசன் முழுவதும் கவின் - சாக்க்ஷி காதல் கதை அதனை தொடர்ந்து கவின் - லாஷ்லியா காதல் கதை என சர்ச்சைகளுக்கும், சுவாரஸ்யத்திற்கும் பஞ்சம் இல்லாமல் நகர்ந்து சென்றது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் நேற்று வெளியேறினார்.
மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற கவின் போட்டியின் இறுதிவரை சென்று பிக் பாஸ் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் அவருடைய இந்த திடீர் முடிவு மற்ற போட்டியாளர்கள் உட்பட ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சரி, இந்த சீசனில் யார்தான் வெற்றிபெறுவார்? யாருக்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கு? தற்போதைய நிலவரப்படி முகேன் கோல்டன் டிக்கெட்டை கைப்பற்றி இறுதி வாரத்திர்க்கு முன்னேறியுள்ளார். இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு மற்றவர்கள் இறுதி வாரத்திற்கு தகுதி பெறுவார்கள்.
அநேகமாக இந்த வாரம் லாஷ்லியா வெளியேற்றப்பட்டு மற்றவர்கள் உள்ளே செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் மீதம் உள்ள போட்டியாளர்களில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்ற போட்டியாளர் என்றால் அது நிச்சயம் சாண்டி மாஸ்டர்தான்.
முகேன் டாஸ்க் செய்வதில் சிறப்பாக செயல்பட்டாலும், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு சற்று குறைவுதான். இறுதி வாரத்தில் மக்களின் வாக்கை பொறுத்து முடிவு இருந்தால் நிச்சயம் இந்த சீசனில் சாண்டி மாஸ்டர் வெற்றிபெறவே அதிக வாய்ப்புள்ளது.