மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஐஸ்வர்யாவுக்கு என் அனுமதி எதற்கு வேண்டும்".? ரசிகருக்கு அபிஷேக் பச்சனின் பதிலடி.!
இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். இவர் தமிழில் இருவர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நந்தினி நடித்த ஐஸ்வர்யாராயின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தப் படத்தைப் பற்றி பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் ஐஸ்வர்யாராயின் கணவர் அபிஷேக் பச்சன்.
இந்தப் பதிவில் ஐஸ்வர்யா ராயின் ரசிகர் ஒருவர் இனியாவது அவங்களை நடிக்க விடுங்க சார், ஆராத்யாவை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டு இருக்கிறார். இதற்கு பதிலளித்து ட்வீட் செய்துள்ளார் அபிஷேக் பச்சன்.
இது குறித்து அந்த ரசிகருக்கு பதில் அளித்து இருக்கும் அபிஷேக் பச்சன் "ஐஸ்வர்யா எந்த விஷயத்தை செய்வதற்கும் அனுமதி வாங்க வேண்டிய தேவை இல்லை. அவருக்கு முழு சுதந்திரமும் இருக்கிறது. அதுவும் அவருக்கு பிடித்த விஷயத்தை செய்வதற்கு எந்த அனுமதியும் தேவையில்லை என கூலாக பதில் அளித்துள்ளார். இந்த ட்விட் தற்போது வைரலாகியிருக்கிறது.