விஜய் படத்தில் நடிக்க நயன்தாரா அதிக சம்பளம் கேட்டது ஏன்? அட இதான் காரணமா?



why-i-increased-my-salary-actress-nayanthara-answer

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. ஒன்றும் தெரியாத அப்பாவி பெண் போல் தோன்றிய நயன்தாரா இன்று லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். விஜய், அஜித், சூர்யா, சிம்பு என அணைத்து தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் நயன்தாரா.

இவரது புகழ் எவ்வளவு வேகமாக வளர்ந்ததோ அதைவிட வேகமாக இவரைப்பற்றிய விமர்சனங்கள் அதிகமாகவே வளர்ந்தது. அதற்கு காரணம் நடிகர் சிம்புவுடன் ஏற்பட்ட காதல் மற்றும் பிரிவு. அதன் பிறகு நடிகருக்கும், நடன இயக்குனருமான பிரபு தேவாவுடன் ஏற்பட்ட சலசலப்பு போன்றவைதான் காரணம்.

nayanthara

தற்போது நானும் ரவுடிதான் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருப்பதாகா கூறப்படுகிறது. இந்நிலையில் தனது படத்தின் சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளார் நடிகை நயன்தாரா. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி நடிக்க இருக்கும் படத்தில் நயன்தாராவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்பட்டது. பின்னர் விஜய் படத்தில் நடிக்க நயன்தாரா அதிக சம்பளம் கேட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அதுகுறித்து மேலும் செய்தி ஓன்று வெளியாகியுள்ளது. கோலமாவு கோகிலா படம் ரூ.12 கோடி வசூல் செய்து இருக்கிறது. அந்த படத்துடன் வந்த ஒரு பெரிய கதாநாயகனின் படம் ரூ.9 கோடிதான் வசூல் செய்து இருக்கிறது. எனவே என் சம்பளத்தை மேலும் ரூ.2 கோடி உயர்த்தியதில், எந்த தவறும் இல்லை” என்று கூறுகிறாராம் நயன்.