மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விருது வாங்க தகுதியான படம் ஜெய் பீம் இல்லையா.? ரசிகர்கள் வேதனை..
இன்று மாலை 5 மணிக்கு, 69ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த படம் என பல பிரிவுகளில் அறிவிக்கப்பட்டன.
'புஷ்பா' படத்துக்காக அல்லுஅர்ஜூனுக்கு சிறந்த நடிகர் விருது, 'கங்குபாய் கதியாவாடி' படத்தில் நடித்த அலியா பட் மற்றும் 'மிமி' படத்தில் நடித்த கீர்த்தி சனோன் ஆகியோருக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாதத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது, தமிழில் சிறந்த படமாக 'கடைசி விவசாயி' படமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஜெய் பீம்' படத்திற்கு எந்த விருதும் அறிவிக்கப்படவில்லை.
உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தமிழக முதல்வர் கூட பார்த்துவிட்டு பாராட்டியிருந்தார். தற்போது இந்தப்படத்திற்கு எந்த விருதும் அறிவிக்கப்படாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தேசிய விருது இல்லை என்றால் என்ன. இந்த படம் எங்கள் இதயத்தில் எப்போதும் இருக்கும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.