மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் திருமணம் செய்வீர்களா.? ரசிகரின் கேள்விக்கு அதிர்ச்சி பதில் அளித்த நடிகை சமந்தா.!
நடிகை சமந்தா எப்போதும் பிசியாக இருந்து வந்தாலும் ரசிகர்களோடு உரையாடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் நேற்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ask me anything என்று ஸ்டோரியை போட்டிருந்தார். அதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் அனைவரும் சமந்தாவிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பத்தொடங்கினர். சமந்தாவும் அதற்கு அசராமல் பதில்களை கொடுத்துவந்தார்.
அந்த வகையில், சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் மீண்டும் திருமணம் செய்வது குறித்து யோசித்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார். ரசிகரின் இந்த கேள்விக்கு திடீரென யாரும் எதிர்பாராத விதத்தில், ஒரு பதில் வழங்கினார் நடிகை சமந்தா, அதாவது, " புள்ளி விவரத்தின்படி இது மோசமான முதலீடாக அமையக்கூடும்" என்று ஸ்மைலி எமோஜியுடன் தெரிவித்தார்.
அவர் தெரிவித்துள்ள இந்த பதிலால், அவர் இன்னொரு திருமணத்திற்கு தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 4 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கடந்த 2021-ஆம் ஆண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் மனமுவந்து பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.