மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
WOW செம க்யூட்.. திருமணமாகாமல் குழந்தை.. முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா..!
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை இலியானா. இவர் தமிழில் கேடி மற்றும் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றார்.
இதனையடுத்து சமீபத்தில் இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். மேலும் அவர் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டிருந்தார். இவரது பதிவை கண்ட ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில் இலியானா தன் காதலருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். மேலும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.